ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

 காலபைரவர் 

பொன்னமராவதி ராஜராஜ சோழீசுவரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவர்க்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தொடக்கமாக காலபைரவருக்கு மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை, புனுகு மற்றும் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.இதேபோல அழகியநாச்சியம்மன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், வேந்தன்பட்டி கோயில், கதலிவனேஸ்வரர் உள்ளிட்ட நெய்நந்தீஸ்வரர் திருக்களம்பூர் கோயில் கோயில்களில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

Tags

Next Story