தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது.இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.
தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால் இன்று இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அபிஷேகம் செய்தனர். ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளால் பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.