சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

கோப்பு படம்


சேந்தமங்கலத்தில் புகழ்பெற்ற சௌந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் திருகோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாகும். இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சேந்தமங்கலம் சௌந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சிவன் கோவிலில் நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் மஞ்சள், திருமஞ்சனம், வாசனை திராவிங்கள், பால், தயிர், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. நந்தி பகவானும், சிவபெருமானும் சிறப்பு அலங்காரத்திலும், சௌந்தரவள்ளி அம்பாள் ரிஷப வாகனத்தில் நாயகர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேந்தமங்கலம், காரவள்ளி, அக்கியம்பட்டி, மின்னாம்பள்ளி, காந்திபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கையிலை மலையான் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story