வேட்டவலம் சிவன் கோவிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

வேட்டவலம்  சிவன் கோவிலில் தேய்பிறை  பிரதோஷ வழிபாடு

கோவிலில் நடந்த வழிபாடு

வேட்டவலம் சிவன் கோவிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சிவன் கோவில் தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீதர்மசம்வர்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு இன்று பிரதான நந்திக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகமும் ,வில்வம், அருகம்புல், பூ போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு ,நந்தி பற்றிய பாடல்கள் துதிக்க தீபாராதனை நடைபெற்றது. நெய்வேத்தியமாக வெண்பொங்கல், கடலை படையலிட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ராஜேஷ் குருக்கள்,கார்த்திக் குருக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். அதே போல் வேட்டவலம் அடுத்த ஆவூரில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது .

மூலவர் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் கோவிலில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags

Next Story