நாகர்கோவிலில் தொலைதொடர்பு ஆலோசனை கூட்டம்; எம்.பி., பங்கேற்பு
நாகர்கோவிலில் தொலைதொடர்பு ஆலோசனை கூட்டம்; எம்.பி., பங்கேற்பு
குமரி மாவட்டம் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் பி.ஜி. பிரதாப் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தொலை தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். மண்டல பொது மேலாளர் இராமச்சந்திர குமார், துணை மேலாளர் மணிகண்டன், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆன்றணி ராஜேஷ், துரை, பால்ராஜ், ஜோசப் ராஜ், ஆரோக்கிய ராஜன் மற்றும் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணாடி இழை இணையவழி சேவையில் தமிழகத்தில் குமரி மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும், இது வரை எந்த தொலை தொடர்பு நிறுவனமும் சேவை கொடுக்காத குமரி மலையோர பகுதிகளான கடையல், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கழியல், தடிக்காரக்கோணம், சூருழோடு, தோவாளை போன்ற பகுதிகளில் உள்ள 14 கிராம பகுதிகளில், பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் பி.எஸ்.என்.எல்., சேவை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.