தெலுங்கு யாதவ சமுதாய மகாசபை கூட்டம்
வாசுதேவநல்லூர் அருகே மலையடிக்குறிச்சியில்நடைபெற்ற தெலுங்கு யாதவ சமுதாய மகாசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மலையடிக்குறிச்சியில் தெலுங்கு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஐவராஜா கோவிலில் தெலுங்கு யாதவ மகாசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகாசி பெருங்கொடைக்கான தலைக்கட்டு வரி ரூ.1000, சோலார் பேனல் வைத்து மின்சார உற்பத்தி செய்வது மின்கட்டணத்தை குறைத்தல், ஐவராஜாக்கள் கருவறை தளம் சீரமைத்தல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் மற்றும் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story