கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை....

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை....

ஆட்சியர் சரயு 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 26.04.2024 மதியம் 1 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் நிலவி வரும் வெப்ப அலை மற்றும் வெப்ப காற்றும் வீசப்பட்டு வருகிறது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளாக விளங்கும் ஊத்தங்கரை,பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி, ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்த அறிவிப்பு ஆணையில் மதியம் 1மணி முதல் 3:00 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் அதிக வெப்ப காற்று வீசப்பட்டு வரும் சூழ்நிலையில் நீர்ச்சத்து உள்ள பொருட்களை அருந்த வேண்டும் வெப்ப தாக்கத்தினால் ஏதேனும் உடல்நிலை மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்து வந்த நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தெரிவித்தார் அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வீசப்பட்டு வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள நீர்ச்சத்துள்ள பொருட்களை அருந்த வேண்டும் இளநீர் நுங்கு மோர் மோர் கலந்த கூல் உள்ளிட்ட நீர்ச்சத்து பொருட்களை அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story