விருதுநகரில் கோவில் உண்டியல் திருட்டு

விருதுநகரில் கோவில் உண்டியல் திருட்டு
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிய நபர் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் பாண்டியன்நகர் கே கே எஸ் எஸ் என் நகர் பகுதியைச் சார்ந்தவர் ரத்தினகுமார் வயது 33. இவர் கே கே எஸ் எஸ் என் நகரில் உள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி திருக்கோவிலில் கடந்த ஆறு வருடமாக பூசாரியாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி வழக்கம் போல் காலை கோவில் திறந்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு 9 மணியளவில் கோவிலுக்கு வந்து பார்த்த போது சாமி சிலை அருகே இருந்த உண்டியலில் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து சாமி சிலையின் கழுத்தில் இருந்த ஐம்பொன் தாலியையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்தவர் . இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் இதை அடுத்து கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்த செயினை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கோவில் பூசாரி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story