குஜிலியம்பாறையில் கோயில் திருவிழா: எருது ஓட்டம்
எருது ஓட்டம்
King 24X7 News (B) |6 Jun 2024 12:12 PM GMT
குஜிலியம்பாறையை அடுத்த ஆா்.கோம்பை பகுதியில் கோயில் திருவிழாவையொட்டி, எருது ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா்.கோம்பை தொப்பையசாமி மலையடிவாரத்தில் ஜக்காளம்மன், பொம்முதேவா், கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது.
அரண்மனையூா், களத்தூா் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயில் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. கரகம் பாலித்தலைத் தொடா்ந்து, தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவுக்கான மந்தையா்கள் சந்திப்புக்கு 16 மந்தைகளைச் சோ்ந்த சுமாா் 1,000 காளை மாடுகள் அழைத்து வரப்பட்டன.
இந்தக் காளைகளுக்கான எருது ஓட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 2 கி.மீட்டா் தொலைவுக்கு நடத்தப்பட்ட போட்டியில், கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த தேரூா் கிராமத்தைச் சோ்ந்த காளை வெற்றி பெற்றது.
Next Story