கோத்தர் பழங்குடி மக்களின் கோவில் திருவிழா

கோத்தர் பழங்குடி மக்களின் கோவில் திருவிழா

பாரம்பரிய நடனம் 

கோத்தர் பழங்குடியினரின் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தர், தோடர், இருளர் , பனியர், காட்டுநாயக்கர், குரும்ர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரியில் மட்டுமே வாழ்ந்து வரும் கோத்திர பழங்குடியின மக்கள் மண் பாண்டங்களை உற்பத்தி செய்வதுடன், கத்தி, கோடரி உள்ளிட்ட கருவிகளையும் தயாரிப்பதில் வல்லவர்கள். ‘அய்னோர் அம்னோர்’ இவர்களின் குல தெய்வ கோவில். இந்த தெய்வங்களுக்கு தனித்தனி கோயில்கள் அமைத்து இம்மக்கள் பாரம்பியமாக வழிப்படுகின்றனர். திருவிழாவின் போது ஆண்கள் ஊரிலிருந்து வெளியேறி கோயில் வளாகத்தில் குடில் அமைத்து அங்கேயே தங்கி தங்கள் குல தெய்வத்தை வழிப்படுகின்றனர். இந்த திருவிழா இன்று உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா கடந்த 8 நாட்களாக நடைபெறது. நிறைவு நாளான நேற்று ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கு ஏற்ப ஆனந்த நடனமாடினர்.

Tags

Next Story