திருவாடனையில் கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம்திருவாடானையில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மணிமுத்தாற்று கிழக்கு திசையில் காமதேனு தீர்த்தத்தின் கிழக்கு கரையில் அமர்ந்து அருள் பாலிக்கும் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற வருகிற 7ம் தேதி காலை நடைபெற உள்ளது

முன்னதாக கோவில் முன்பு உள்ள யாசாலையில் கடந்த ஒன்னாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் திருவிளக்கு பூஜை சரஸ்வதி ஹோமம் தனலட்சுமி பூஜை மறுநாள் நவக்கிரக ஹோமம் அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி மகாத்மியம் பாராயணம் நடந்தது. இன்று கிராம சாந்தி, வாஸ்து சாந்தியை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து வாஸ்து பூஜைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உடுமலையைச் சேர்ந்த நடன கலைஞர் செந்திலின் நவசந்தி பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story