கோவில் கும்பாபிஷேக விழா
வீரகவுண்டம்பட்டியில் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள வீரகவுண்டம்பட்டி, வி. மாயாண்டி தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ இடும்பன், திருக்கோவில் புணரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாக வேள்வி நடத்தி, சிவாஜாரியார்கள் புனித நீரை எடுத்து சென்று, கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊர் கொத்துக்காரர்கள், ஊர் பொதுமக்கள், கிராம மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாதாரணையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடி இருந்த அனைவருக்கும் கோவில் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது