கோவில் கும்பாபிஷேக விழா

செவலூரில் விநாயகர், ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

செவலூரில் விநாயகர், ஆதிபராசக்தி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் உள்ள செவலூரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இன்று அதிகாலை கும்பாபிஷேக விழா மகா கணபதி யாகத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி,பிம்சுத்தி, வேதபாராயணம், திரவ்யாஹூதி, நாடிசந்தானம், மகா பூர்ணஹீ,மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, வேள்வியாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தை ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக மூலவருக்கு மகா தீபா தாரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story