கோயில் கும்பாபிஷேக விழா!
திருவண்ணாமலை மாவட்டம் சோத்துக்கன்னியிலுள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோத்துக்கன்னியிலுள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சோத்துக்கன்னி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயம் ,ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் ஏரி காத்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story