கோவில் கும்பாபிஷேக விழா

வீரமலைபாளையத்தில் குப்பாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

வீரமலைபாளையத்தில் குப்பாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, வரவணை கிராமத்தில் உள்ள வீரமலை பாளையத்தில் சோழபுரம் நாட்டார் பங்காளிகள் குலதெய்வமான அருள்மிகு ஸ்ரீ குப்பாயி அம்மன் திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா அதிகாலையில் மங்கல இசை உடன் துவங்கியது.பின்பு மூன்றாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மகா பூர்ணகூதி நடைபெற்று தீபாதாரணையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமாக பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story