கோவில் நில பிரச்னை; ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

கோவில் நில பிரச்னை; ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நில பிரச்னை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நில பிரச்னை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்போரூர் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் குடியிருப்போருக்கு சொந்தமான நிலங்கள், கந்தசுவாமி கோவில் பெயரில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர். இது குறித்து, விவசாயிகள் சங்கங்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் மனு விபரம்: திருப்போரூர் கிராமத்தில், 135 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயிகள் தங்கள் பெயரில் தாக்கலாகியுள்ள பட்டாவின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்து, இன்று வரை தங்கள் சுவாதீனத்திலும், அனுபோகத்திலும் விவசாயம் செய்து வருகின்றனர்.

நில உரிமையாளர்கள் பெயரில் இருக்க வேண்டிய பட்டா, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பெயரில் தவறுதலாக பதியப்பட்டுள்ளது. இதனால், விவசாயம் சம்பந்தமாக மாநில அரசு மற்றும் மத்திய அரசின் உதவிகள் ஏதும் பெற முடியாமல், அனைவரும் பல ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பெயரில் உள்ள பட்டா எண்: 1-ஐ ரத்து செய்து, 'பூஜ்ஜிய' பட்டாவாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்போரூர் நிலங்களை கள ஆய்வு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, பட்டாதாரரும் நில உரிமையாளருமான விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் என, அவரவர் பெயரில் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story