கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு
பைல் படம்
கயத்தாறு அருகே கோவிலின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த சத்திரப்பட்டி கிராமத்தில் ஊரின் நடுவே அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று, சாமி சிலை கழுத்தில் கிடந்த சுமார் 5 பவுன் தாலி செயினை திருடிக் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பரமசிவம் (55) என்பவர் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story