கோவில் புனரமைப்பு பணிகள்
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா செய்வதற்காக பாலாலயமும் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் முன்னிலையில் தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி பழமை மாறாமல் ராமர், தாயார், ஆண்டாள், ராமானுஜர், நரசிம்மர், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார், அனுமன் உள்ளிட்ட சன்னதியின் விமானங்களும், ராஜகோபரமும்புதுப்பிக்கும் பணி உபயதாரர்கள் நிதி உதவி உடன் நடைபெற்று வருகிறது. மேலும், கோயில் உள்பிரகாரங்களில் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்தப் பணியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story