கிரானைட் கற்கள் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்து விபத்து
விபத்துக்குள்ளான டெம்போ
ராசிபுரம் அடுத்த பாச்சல் பிரிவு அருகே கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற டெம்போ, முன்னாள் சென்ற ஜீப்பின் முன் பக்கத்தில் மோதியதில் டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு டெம்போ சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், ராசிபுரம் அடுத்த பாச்சல் பிரிவில் உள்ள பேக்கரியின் முன்பு மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டீ குடித்துவிட்டு போர்ஸ் ஜீப்பில் நாமக்கல் நோக்கிச் செல்ல மெதுவாக தயாராகினர். அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியை முந்திய டெம்போ, ஜீப் வருவது தெரியாமல், ஜீப்பின் முன்பகுதியில் மோதி விட்டு அருகேயுள்ள தடுப்புச் சுவரில் மோதி, ஒருபக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. இவ்விபத்தில், அதிர்ஷ்டவசமாக டெம்போவில் இருந்த மூவரும் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story


