தற்காலிக மின்வாரிய ஊழியர் தற்கொலை
தற்கொலை
நாகை மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் , மருதூர் பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன். இவரது மகன் வைரமூர்த்தி (வயது 29). இவர் மேலப் பிடாகை அருகே கருங்கண்ணியில் தங்கி மின்சார வாரியத்தில் தற்காலிகமின் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் வைரமூர்த் திக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வைரமூர்த்தியின் மனைவி கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த வைர மூர்த்தி நேற்று முன்தினம் இரவு முப்பத்திகோட்டகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் வைரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.