குட்கா பொருட்கள் விற்ற‌ கடைகளுக்கு தற்காலிக சீல்

குட்கா பொருட்கள் விற்ற‌ கடைகளுக்கு தற்காலிக சீல்

சீல் வைத்த அதிகாரிகள்

குட்கா பொருட்கள் விற்ற‌ கடைகளுக்கு தற்காலிக சீல் வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்ற 54 கடைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் சிவகங்கை மாவட்டத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்கும் கடைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து குட்கா விற்று 54 கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி குட்கா விற்ற கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்து கடைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை நகர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார், எஸ்ஐ சண்முகப்பிரியா ஆகியோர் குட்கா விற்ற ஒரு கடையை தற்காலிகமாக மூடி உள்ளனர். இதே போன்று மற்ற கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்

Tags

Next Story