தொல் திருமாவளவன் தற்காலிக இடைநீக்கம்; வி.சி.க., கண்டன ஆர்பாட்டம்

தொல் திருமாவளவன் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கலர் புகை வரும் குப்பிகளை வீசியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பேசிய 140க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஒருவராவார் தொல் திருமாவளவனின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு . இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் என்கின்ற முகிலன் தலைமையில்திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

கட்சியின் நகரச் செயலாளர் சக்தி பரமசிவம் வரவேற்று பேசினார்,மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன் மாவட்ட பொறுப்பாளர் விஜய் அண்ணன் மாவட்ட துணை அமைப்பாளர் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளர் அரசன் கபிலன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர் தொல் திருமாவளவனின் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இடைநீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர் இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் என்கின்ற முகிலன் கூறும்போது எங்கள் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்து பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பேசிய ஒரே காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது எனவே இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்

Tags

Next Story