தமிழக அரசுக்கு தற்காலிக ஆசிரியர்கள் கோரிக்கை

கோரிக்கை மனுஉடன் தற்காலிக ஆசிரியர்கள்
வேப்பூர் கூட்ரோட்டில் அரசு தற்காலிக ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்று பள்ளி மேலாண்மை குழு தீர்மானத்தின் படி தொகுப்பூதிய தற்காலிக ஆசிரியர்களாக ஓராண்டாக பணி செய்தும், ஊதியம் வழங்காத மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர், ஆதிதிராவிடர் ஆணையர், ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது தற்காலிக ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ஓராண்டாக பணி செய்து வரும் எங்களுக்கு சம்பளம் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அண்டை மாவட்டங்களில் இது போன்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஊதியம் இல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் மேற்கொள்ள போவதாகவும் இதன் பொருட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தை தடையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
