விண்ணை முட்டும் இளநீர் விலை

X
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதிகளில் இளநீர்விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியது இதனால் அப்பகுதியில் பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிக்க, மக்கள் அதிகளவு இளநீரை பருகுவர். இந்நிலையில், ₹20-₹40 வரை விற்பனையான இளநீர், தற்போது ₹50-₹60 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, செவ்விளநீர் ₹70 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் பணச் சுமையை மேலும் அதிகரிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதில் இளநீர் விலை உயர்ந்ததால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
