கனமழையால் ராமநதி அணை நீர்மட்டம் விறு விறு உயர்வு

கனமழையால் ராமநதி அணை நீர்மட்டம் விறு விறு உயர்வு

 ராமநதி அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கடையம் அருகே ராமநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்தது மேலும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த கன மழை பெய்தது. இதனால் கடையம் அருகே உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 37 அடியாக இருந்தது . தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சுமார் 4 அடி உயர்ந்து 41 அடியாக அதிகரித்தது. இதனால் மாவட்டத்திலுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story