தென்காசி: கனிமவள லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு

தென்காசி: கனிமவள லாரி பழுதாகி நின்றதால் பரபரப்பு

எஞ்சின் அகற்றும் பணி 

செங்கோட்டையில் கனிமவள லாரி பழுதாகி நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட கனகர லாரியில் கனிமவளம் கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று செங்கோட்டையில் ஒரு வழி பாதை வழியாக கனிம வளம் ஏற்றி வந்த கனரக லாரி திடீரென்று பழுதாகி பேருந்து நிலையம் அருகில் நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழுதான லாரியின் எஞ்சின் அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் கனிம வளங்கள் ஏற்றி சென்ற லாரிகள் தொடர்ந்து இந்த மாதிரி செயல் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்துகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story