வேட்பாளர்களுக்கு தென்காசி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வேட்பாளர்களுக்கு தென்காசி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தென்காசி ஆட்சியர் 

தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ. கே. கமல் கிஷோர் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ. கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையமானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை உள்ள வேட்பாளர்கள், குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர் கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரை களை வழங்கியுள்ளது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் படிவங்களை வரையறுத் துள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் வெளியீடு செய்ய படிவம் C-1, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் அரசியல் கட்சி வெளியீடு செய்ய படிவம் C-2, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காகபடிவம் C-3, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக வேட்பாளரின் அறிக்கைபடிவம் C-4, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக அரசியல் கட்சியின் அறிக்கை படிவம் C-5, தலைமை தேர்தல் அதிகாரி யின் அலுவலக பயன்பாட்டிற் காக படிவம் C-6, படிவம் C-7. குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் வெளியிடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story