மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய தென்காசி கலெக்டர்
தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளை கலெக்டர் வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10- மாற்றுத் திறனாளி களுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.
Next Story