தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடனா அணை அதன் முழு கொள்ளளவான 85 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வரும் 200 கன அடி நீர் இன்று காலை முதல் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை அதன் முழு கொள்ளளவு 87 அடியாக நிரம்பி உள்ளது. அணைக்கு 116 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி 68.24 அடியாக உள்ளது, குண்டாறு 36.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து 31 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அடவி நயினார் அணை 121 அடி நீர் இருப்பு உள்ளது.
Next Story