தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்
தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் தமிழ்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலா் சுமதி முன்னிலை வகித்தனா்.
உறுப்பினா்கள் கனிமொழி, சாக்ரடீஸ், பூங்கொடி, சுப்பிரமணியன், மைதீன்பீவி, ராசாதலைவா், மாரிமுத்து,சந்திரலீலா, தேவி, சி.சுதா,பி.சுதா ஆகியோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், 15ஆவது மத்திய நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3கோடியே 7லட்சத்து 42ஆயிரத்து 892 இல் நிா்வாக செலவினம் போக மீதமுள்ள தொகையில் வரையறுக்கப்படாத நிதியில் ரூ.1கோடியே 10 லட்சத்து 67ஆயிரம் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதியில் குடிநீா் பணிகளுக்கு ரூ. 83 லட்சத்து 581 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதியில் சுகாதாரப்பணிகளுக்கு ரூ. 83லட்சத்து 581க்கும் என மொத்தம் ரூ. 2கோடியே 76லட்சத்து 68ஆயிரத்து 603க்கு தோ்வு செய்யப்பட்ட பணிகள் மீது விவாதம் நடைபெற்று அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னா் உறுப்பினா்களின் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில், உறுப்பினா் கனிமொழி பேசியது: குட்கா வழக்கில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் கணவா் கைதாகியுள்ளாா். எனவே அவா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா். அதற்கு மாவட்ட ஊராட்சி செயலா், மன்றப் பொருளில் உள்ள பொருள்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றாா். இதனிடையே மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி கூட்டரங்கை விட்டு வெளியே சென்றுவிட்டாா்.