தென்காசி மாவட்ட மழை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பா நதியில் 3.6 செ.மீ மழையும், ஆயக்குடியில் 2.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழை நிலவரம் பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் மழை அளவு, கடனா :4 மி.மீ ராமா நதி, 6 மி.மீ கருப்பா நதி: 36 மி.மீ குண்டாறு :2.மி.மீ அடவிநயினார் 13.மி.மீ ஆயக்குடி : 25.மி.மீ. தென்காசி : 7.4 மி.மீ மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி நீர்த்தேக்கம் பகுதியிலும், இரண்டாம் பட்சமாக ஆய்க்குடி பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story