தென்காசி திமுக வேட்பாளருக்கு தமுமுக அலுவலகத்தில் வரவேற்பு
தென்காசி திமுக வேட்பாளருக்கு தமுமுக அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் அவர்கள் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவு கேட்டு புளியங்குடி தமுமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது தமுமுக மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் அவரை வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story