தென்காசி : குறுஞ்செய்தி மூலம் கன மழை அலர்ட்

தென்காசி : குறுஞ்செய்தி மூலம் கன மழை அலர்ட்
 கனமழை அலர்ட் (பைல் படம்)
தென்காசியில் பெய்யும் கனமழை குறித்து தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை துறை சார்பில் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை துறை மூலம் அனைவரது தொலைபேசிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே கிளம்பினால் கையில் பாதுகாப்பாக குடைகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ன அறிவுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story