தென்காசி : சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு

தென்காசி :  சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு
 சின்ன வெங்காயம் 
தென்காசியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40 முதல் 50 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சின்ன வெங்காயம் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வருகின்றனர். இதனால் கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 முதல் 30 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 30ம் தேதி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story