தீக்குளிக்க முயன்றவர்களால் பதற்றம்

தீக்குளிக்க முயன்றவர்களால் பதற்றம்

தீக்குளிக்க முயன்ற நபர்


செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த சமத்துவபுரம் கிராமம் உள்ளது கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியால் சுமார் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆரம்ப முதலே பயனாளிகள் தேர்வு செய்வதில் குளறுபடிகள் இருந்து வந்துள்ளது.

தற்போது 100 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் 13 வீடுகளை மட்டும் காலி செய்யவும், புதிதாக பயனாளிகளை அமர்த்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நோட்டீஸ் ஒட்ட வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களும், வருவாய் துறையினரும், காவல்துறை உதவியுடன் வீடுகளுக்கு நோட்டீஸ் ஒட்டியும் காலி செய்ய சொல்லியும் வந்தனர்.

இதனால் அந்த 13 வீட்டு நபர்கள் போராட்டம் செய்தனர் இதில் ராணி 50 சண்முகம் 40 என்கின்ற இருவரும் தீ குளிக்க முயன்றனர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Tags

Next Story