''டென்சிங் நார்கே தேசிய சாகச விருது'' - உடனே விண்ணப்பிங்க !

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது - உடனே விண்ணப்பிங்க !

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது

2023 -ஆம் ஆண்டிற்கான “டென்சிங் நார்கே தேசிய சாகச விருது” கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் நிலம், கடல் மற்றும் வான்வெளியில் வீர, தீர சாகசம் புரிபவர்களுக்காக தலா ஒரு விருது வழங்கப்படுகிறது. சாகசப்பந்தயங்களில் உள்ள நபர்களின் சாதனைகளைப் புதுப்பிக்கவும், சகிப்புத்தன்மை, குழுவாக இணைந்து திறமையாக செயல்படுபவர்களுக்கு மற்றும் சாகசத்தை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மேலும், சாகசத்துறையில் “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான https://awards.gov.in/ மூலம் 15.04.2024 முதல் 14.06.2024 வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரையுடன் கூடிய ஒப்பம் பெற்று அரசுக்கு 31.05.2024-க்குள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பங்கள் 28.05.2024-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story