சேலத்தில் பயங்கரம் - ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

சேலத்தில் பயங்கரம் - ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

உயிரிழப்பு 

ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை-உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு கள்ளக்காதலி தலைமறைவு.

சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி என்று கூறிக்கொண்டு 2 பேர் வாடகைக்கு தங்கினர். கடந்த 11-ந் தேதி முதல் அந்த வீடு பூட்டிக்கிடந்தது. நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு வசிப்பவர்கள் பழனிக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு, வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சமையல் அறையில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் அந்த வீட்டில் வசித்தவர் என்பது தெரியவந்தது. அந்த உடலை போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வாடகை வீட்டில் வசித்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் அஸ்தம்பட்டி இட்டேரி ரோட்டை சேர்ந்த நிஷார் பாட்ஷா (வயது 45). சரக்கு ஆட்டோ டிரைவர் என்பது தெரிந்தது.

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஹசினா என்ற மனைவி மற்றும் மகன், மகள் இருப்பதும் தெரியவந்தது. அவர் கடந்த 2 மாதமாக வாரத்திற்கு ஒருநாள் மட்டும் இட்டேரி ரோட்டில் உள்ள வீட்டிற்கு சென்று வந்ததும் தெரிந்தது. பின்னர் நிஷார் பாட்ஷாவுடன் தங்கி இருந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போது அவருடன் வசித்த பெண் திருப்பூர் விக்னேஷ்வரா நகரை சேர்ந்த அருள்மரியஜோசப் மகள் பிரியா என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறும்போது, சரக்கு ஏற்ற திருப்பூர் சென்ற போது பிரியாவுக்கும், கொலையான நிஷார் பாட்ஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. பின்னர் அவரை சேலத்திற்கு அழைத்து வந்து தனிக்குடித்தனம் நடத்தி உள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கலாம்.

இதில் ஆத்திரம் அடைந்த பிரியா, நிஷார் பாட்ஷாவை கொலை செய்து விட்டு, உடலை வீட்டிற்குள் போட்டு விட்டு தலைமறைவாகி இருக்கலாம். இருப்பினும், பிரியாதான் கொலை செய்தாரா?, கொலைக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து தலைமறைவான நிஷார் பாட்ஷாவின் கள்ளக்காதலி பிரியாவை பிடித்து விசாரணை நடத்தினால் தான் தெரிய வரும் என்று கூறினர். இந்த கொலை தொடர்பாக நிஷார் பாட்சா மனைவி ஹசீனா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story