ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்
X

ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்


புதிய ஜவுளி கொள்கையை கண்டித்து திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1500 க்கு மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், 63.வேலம்பாளையம் சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். திருப்பூர் கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர் மற்றும் பொருளாதார குறைந்துள்ளது பங்களாதேஷ் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து மிகவும் மலிவான துணிகள் மிகவும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது மற்ற மாநிலங்களில் புதிய ஜவுளிக் கொள்கை ஜவுளி தொழிலுக்கு என்று தனிப்பட்ட மின்சாரம் மானியம் போன்ற காரணங்களால் ஜவுளி உற்பத்தி செலவு தமிழகத்தை விட மிகவும் குறைவாக உள்ள காரணத்தினால் அவருடன் போட்டி போட இயலாத நிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசின் மிகச்சிறந்த சட்டமான மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை கடந்த வருடங்களில் சிறப்பான முறையில் கடைபிடித்த காரணத்தினால் சிறு குறு விசித்திரியாளர்கள் இந்த மந்தமான சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தனர் ஆனால் தற்போது பெரும்பாலான வணிக நிறுவனங்களிலும் சிறு குறுக்கடைகளிலும் மீண்டும் நிகழிப்பை பயன்பாடு பெருகிவிட்ட காரணத்தினால் துணிப்பைகளின் தேவை முற்றிலுமாக சரிந்து விட்டது.

எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு மீண்டும் கையில் எடுத்து அதிகாரிகளை கடினமாக அதனை பின்பற்ற வலியுறுத்தி சிறு குறு விசை தெரியவரும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர்,கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 25 ம் தேதி வரை முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காத சூழல் உருவாகும்.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை , திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும். ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளகள் நேரடியாக பாதிக்கப்படுவர். தீபாவளி நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். ஏற்கனவே உற்பத்தி செய்த 500 கோடி அளவிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

Tags

Next Story