கிருஷ்ணகிரியில் ஜூன் 21-இல் ஜவுளிப் பூங்கா விழிப்புணா்வு கூட்டம் !
ஆட்சியா் கே.எம்.சரயு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 21-ஆம் தேதி, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம், தொழில் முனைவோருடன் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் தொழில் முனைவோா்களுக்கு ரூ. 2.50 கோடி வரை நிதி உதவி, தமிழக அரசால் வழங்கப்படும். இவ்வாறு அமைய உள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும்.
இந்தப் பூங்கா அமைப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா், துணிநூல் துறை, 1ஏ-2-1 சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம் 636006 என்ற முகவரியிலோ அல்லது 0427-2913006 என்ற எண்ணிலோ அல்லது இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.