தை அமாவாசை; அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை தேவிபட்டினம் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினார்.
ராமநாதபுரம் இந்த ஆண்டு நடக்கும் மிகப்பெரிய தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் சேதுக்கரை தேவிபட்டினம் போன்ற இடங்களில் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்திலும் இருந்தும் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக புனித நீராட வந்திருந்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி விட்டு தர்ப்பணம் செய்து ராமநாதசாமி பர்வதையை பர்வத வர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்கின்றனர். பின்பு தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் புனித நீராடி விட்டு கடல் அடைத்த பெருமாளை தரிசனம் செய்தனர் அதன்பிறகு சேதுக கடலில் புனித நீராடி விட்டு சேது பந்தன ஆஞ்சநேயரை பரிசுத்து விட்டு செல்லும் பக்தர்கள்.
Next Story