தை அமாவாசை; ராசிபுரம் காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் தை அமாவாசை வெள்ளி கிழமையை முன்னிட்டு ஸ்ரீகாளியம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது. தை அமாவாசை முன்னிட்டு ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ காளியம்மன் தரிசனம் செய்து சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story