தை அமாவாசை; பூம்புகார் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு

தை அமாவாசை; பூம்புகார் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு

 சீர்காழி அருகே பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

சீர்காழி அருகே பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடலில் கலக்கிறது. சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரிசங்கமத்தில் புனித நீராடுவது பொதுமக்கள் வழக்கம்.ஆடி மற்றும் தை அமாவாசையன்று காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதான் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி தை அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்துள்ளனர். முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக சீர்காழி,மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து பூம்புகாருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.பூம்புகார் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story