நாகையில் தை கார்த்திகை வழிபாடு

நாகையில் தை கார்த்திகை வழிபாடு

நாகையில் தை கார்த்திகை வழிபாடு

நாகை மாவட்டம் சிக்கல் அருகே உள்ள பொரவச்சேரி கந்தசாமி கோவிலில் நேற்று நடைபெற்றா தை மாத கார்த்திகை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம், சிக்கல் அருகே உள்ள பொரவச்சேரி கந்தசாமி கோவிலில் நேற்று தை மாத கார்த்திகை வழிபாடு நிகழ்ச்சியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் , உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story