108 சீர்வரிசை தட்டுகளுடன் வந்த தாய் மாமன்
108 சீர் வரிசை தட்டுகளுடன் வந்த தாய் மாமன்
திண்டுக்கல் அருகே உள்ள ஏ வெள்ளோட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ் இவர் ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தங்கை எஸ்தர் செல்வ பாரதி இவரது கணவர் டோமினிக் இவர்களது குழந்தைகள் ஜெரிக் ஆண்டோ மற்றும் ஞான ஷஸ்மிகா, இவர்களது முதல் திரு விருந்து விழா திண்டுக்கல்லில் இன்று 12.05.24 நடைபெற்றது.
தனது தங்கையின் குழந்தைகளுக்கு நடைபெறும் முதல் விசேஷம் என்பதால் தாய்மாமன் சீர் பெரிய அளவில் செய்ய வேண்டும் என தாமஸ் முடிவு செய்தார் அதன்படி ஐந்து பவுன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள், 50 வகையான இனிப்பு வகைகள் , 50 வகையான பழம் வகைகள் மளிகை சாமான்கள் அரிசி மூட்டைகள், முறுக்கு, மிக்சர், போன்ற கார வகைகள் என்ன 108 சீர்வரிசை தட்டுகளை டாரஸ் லாரி மற்றும் டிராக்டர் வைத்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வந்து குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர்வரிசை செய்து தனது அன்பை வெளிபடுத்தி அசத்தினார்.