தூத்துக்குடியில் தைப்பொங்கல் கோலாகலம்
பொங்கல்
தூத்துக்குடி: தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாடினர். தூத்துக்குடி விஎம்எஸ் நகர் பிரேம் நகர் முத்தம்மாள் காலனி காமாட்சி அம்மன் கோவில் தெரு சிவன் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பாக கோலம் போட்டு அதன்மேல் அடுப்பு வைத்து புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தனர்.மேலும் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்தனர்.
தூத்துக்குடி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முன்பாக பொங்கல் பானையை வைத்து ஒருசேர பொங்கலிட்டனர். பானையில் பால் பொங்கி வரும்போது பொதுமக்கள் பொங்கலோ பொங்கல் என தெரிவித்து சூரியனை வழிபட்டு தைப்பொங்கலை வரவேற்றனர் மேலும் இந்த ஆண்டு எந்த விதமான இயற்கை சீற்றங்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தனையும் செய்தனர்.