தெப்பத் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி மற்றும் அம்பாள் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள சுந்தர பாண்டிய விநாயகர் ஆலயத்தில் இருந்து எழுந்தருளினர்.
இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை , கும்ப பூஜை , ருத்ர ஜெபம், மூல மந்திரம், பால மந்திரம் ஹோமம் ,மஹா அபிஷேகம் ,தீர்த்தவாரி கும்பாபிஷேகம் நடைபெற்று. இரவு 7;30 மணி அளவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுந்தரபாண்டிய விநாயகர் மற்றும் பாகம்பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தெப்பத்தில் 11முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தனர். இந்த தெப்பத் திருவிழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.