விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூச தேர் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம்- புகழ்பெற்ற விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் புகழ்பெற்ற விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூச தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த முருகன் திருத்தலமாகும். இந்த கோவிலின் மலை உச்சியில் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் இந்த முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் மற்றும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு அருணகிரிநாதருக்கு முருகன் காட்சிதந்து அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாடவைத்த தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவானது தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி அடுத்த 10 நாட்களுக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும் இந்த அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு அஇஅதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதூ குறிப்பாக பக்தர்கள் தங்கும் விடுதி, மலை அடிவாரத்தில் அண்ணதான கூடம், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சாய்தள படிக்கட்டுகள் மற்றும் பக்தர்கள் தங்களது வாகனங்களில் மலை வரை சென்று தரிசனம் செய்ய தார்சாலை லிப்ட் வசதியுடன் மலைப்பதை உள்ளிடைவைகளை அண்ணாதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்டது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் வைகாசி விசாகத்திற்கு வருடம் தோறும் திருத்தேர் நகரை சுற்றி உலா வருவது வழக்கமாகும். 1980 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இத்திருத்தேர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் 1998 ஆம் ஆண்டு திருப்பணிகள் துவங்கப்பட்டு 30.01.1999 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. அதனை தொடர்ந்து திருத்தேரின் உட்புறம் உள்ள மரங்கள் சேதம் காரணமாக இந்த ஆண்டு திருப்பணி துவங்கப்பட்டு இந்த சமய அறநிலைத்துறை மூலம் ரூபாய் ஐந்து லட்சம் மற்றும் பக்த கோடிகள் நன்கொடை மூலமாக உத்தேச மதிப்பாக ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரங்கள் மாற்றப்பட்டு சிற்ப வேலைப்பாடுகளுடன் இன்று காலை வள்ளி தெய்வானுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் திரு உருவ சிலையுடன் திருத்தேர் பவனி வர உள்ளது. இன்று காலை 10.30மணியளவில் திருத்தேரானது இழுக்கப்பட்டு விராலிமலை ஸ்ரீ முருகன் மலையை சுற்று வலம் வந்து கொண்டிருக்கிறது விராலிமலையின் முக்கிய வீதீகளின் வழியே மலையை சுற்றிதிருத்தேர் வலம் வந்து கொண்டிருக்கிறது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திருத்தேரை முழுவதும் வடம் பிடித்து சுற்றி வருகிறார். இந்த திருத்தேர் நிகழ்வில் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதனை தொடர்ந்து நாளை இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது 6ம்தேதி விடையாற்றியுடன் விழாவானது நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அண்ணதானத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Tags

Next Story