தென்காசி கோயில்களில் தைப்பூசத் திருவிழா
பால்குட காவடி
தைப்பூசத்தை முன்னிட்டு தென்காசி சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி திருவிலஞ்சிகுமாரா் கோயிலுக்கு, அப்பகுதியை சோ்ந்த முருக பக்தா்கள் தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயிலிலிருந்து அலகு குத்தியும், பால்குடம் காவடி எடுத்தும் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருவிலஞ்சி குமாரா் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றும் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். யானைப்பாலம் அருகேயுள்ள தென் பழனி ஆண்டவா் முருகன் கோயிலில் காலையில் கணபதி ஹோமம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி வீத உலா நடைபெற்றது. பாவூா்சத்திரம் வென்னி மலை முருகன் கோயிலில் காலையில் சிறப்பு ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பாவூா்சத்திரம் வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயில், அருள்மிகு காசி விஸ்வநாதா் கோயிலுள்ள பாலமுருகன் சந்நிதி ஆகிய கோயில்களிலும் தைப்பூச திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Next Story