ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா
தைப்பூச திருவிழா
விழுப்புரம், ராமலிங்க சுவாமி மடத்தில் 153-வது ஆண்டு தைப்பூச ஜோதி பெருவிழா நேற்று முன்தினம் காலை சன்மார்க்க கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இந்த ஜோதி தரிசனத்தை விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்டியாலயா நடனப் பள்ளி குழுவினரின் நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் பங்கேற்ற குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் மதனா, எழுத்தர் பிரபாகரன் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் செய்திருந்தனர்