பழனிக்கு புறப்பட்ட தைப்பூச காவடிகள்

பழனிக்கு புறப்பட்ட தைப்பூச காவடிகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

எடப்பாடி அடுத்த சித்தூர் கிராமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து தைப்பூச காவடிகள் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு பல்வேறு பிரிவுகளாக அடுத்தடுத்து பாதயாத்திரையாக புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனிடையே எடப்பாடி ஒன்றியம் சித்தூர் கிராமத்திலுள்ள புளியம்பட்டி, ஆடையூர், செல்லாண்டிக்காடு ஆகிய ஊர்களிலிருந்து புறப்பட்ட தைப்பூச காவடிகள் ஒன்றிணைந்து ஒட்டப்பட்டியிலுள்ள அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஸ்ரீ ல ஸ்ரீ பரமானந்தம் சுவாமிகள் தலைமையில் தைப்பூச காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்களுடன் பாதையாத்திரையாக புறப்பட்டனர்.

அப்போது வழிநெடுகிலும் காவடிகளுடன் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓம் என வர்ணங்கள் போட்டு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள் அன்னதானத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி காவடிகளை வணங்கி வழியனுப்பி வைத்தனர். இதனால் எடப்பாடியில் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது.

Tags

Next Story